அலைகடலின் ஓரத்திலே பார்த்தவை படித்தவை

போகிற போக்கில் கற்றுக் கொள்பவை

நோட்டுப் புத்தகம் தற்கொலை (29/06/2006)

பதிந்தவர் masivakumar மேல் அக்டோபர் 28, 2006

நேற்றைக்குக் காலையில் வேலைக்கார அம்மா வந்ததுமே,

“ஒரு பய்யன், அவங்க அம்மாட்ட நோட்டுப் புத்தகம் வாங்கிக் கேட்டிருக்கிறான். அவளுக்கு ஒடம்பு சரியில்லாம நாலு நாளா வேலக்குப் போகல, நீதான் பாக்கிறயே, எனக்கு ஒடம்பு சரியானவுடன் காசு கிடச்சதும் வாங்கிக்கலாம் என்று சொல்லிட்டாளாம். பள்ளிக்கோடத்தில வாத்தியார் திட்டுவாராம். அதனால் சுருக்கு மாட்டித் தூக்கு போட்டுக்கிட்டானாம்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டது.

ஆரம்பத்திலேயெ இப்படி ஏதோ வரப் போகிறது என்று ஊகித்திருந்தேன். கடைசி வாக்கியம் கேட்டது திக்கென்றது. வேலைக்கார அம்மாவின் பேத்தியின் கூடப் படிப்பவனாம் அந்தப் பையன். எல்லா மாணவர்களும் வீட்டுக்குப் போய் துக்கம் விசாரித்தார்களாம்.

“ஒங்கூடப் படிக்கிறவங்க எல்லாம் ஒன்னப் பாக்க வந்திருக்காங்களே என்று அந்த அம்மா அழுவுது”,

“எம்பேத்தி ராத்திரியெல்லாம் சாப்பிடாம அழுதுக்கிட்டே இருந்திச்சி”. ஒன்பதாம் வகுப்பு படிக்கிறானாம் பையன்.

“அதான் இப்போ ஸ்கூல்லேயே புக் எல்லாம் கொடுத்திர்ராங்களே”
“இல்ல ஐயா அதுக்கும் பாதிக்காச வாங்கிக்கிறாங்க.”
“புக் கொடுப்பான், நோட் எல்லாம் கொடுக்க மாட்டாங்களாக்கும்.”
“நீங்க எல்லாம் ஏண்டே வந்து உயிர எடுக்கிறீங்க என்று வாத்தியார்கள் திட்டியிருப்பாங்க”
“சில ஆசிரியர்கள் அப்படித்தான், அவங்க அதிகாரத்த வேறு எங்கே காட்டுவது, பசங்களத்தான் கொடுமைப்படுத்துவாங்க”

என்று பலவிதமாகப் பேசினோம். போன உயிர் திரும்பிடவா போகுது. நாமென்னவோ, ஆற்றில் காசை எறிவது தேசபக்தியா, டோண்டு கற்பைப் பற்றிச் சொன்னது சரியா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>